பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம்
Published on

சென்னை,

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 350 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னணி பெற்றுள்ளது.

இதன்மூலம், பிரதமர் மோடி ஆட்சியை தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. இந்த சூழலில், பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.

எடப்படி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில், பொதுத்தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றதற்காக நான் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com