ஈரோட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ் அவசர ஆலோசனை...!

ஈரோட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஈரோட்டில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் ஈ.பி.எஸ் அவசர ஆலோசனை...!
Published on

ஈரோடு,

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர்.

இந்த நிலையில் குறைந்த கால அவசாசமே உள்ளதால் பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதி ஒன்றில் அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றார். அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பங்கேற்று உள்ளதாக கூறப்படுகின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com