காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியினர் மரியாதை

புளியங்குடியில் காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
காமராஜர் சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சியினர் மரியாதை
Published on

புளியங்குடி:

புளியங்குடியில் நகர அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடந்த விழாவுக்கு கட்சியின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் சுந்தர் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் ஈஸ்வரன், துணை கொள்கை பரப்பு செயலாளர் செங்குளம் கணேசன், இளைஞரணி செயலாளர் குருஸ்திவாகரன், விவசாய அணி துணை செயலாளர் எட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் வில்சன், பாபு, மணிமாறன், பாஸ்கரன் உள்பட பலர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. முடிவில் புளியங்குடி நகர துணை செயலாளர் விஜய் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com