சமத்துவ பொங்கல் விழா

சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
சமத்துவ பொங்கல் விழா
Published on

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா, நகர தலைவர் அகமது மைதீன் தலைமையில் புனித அன்னம்மாள் தெருவில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான், மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, புறநகர் மாவட்ட துணைத்தலைவர் முல்லை மஜித், காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொன்ராஜ், நகர செயலாளர் காஜா மைதீன், காங்கிரஸ் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆனி செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஷேக் முகமது, நகர பொருளாளர் ஷேக் செய்யதலி, பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாவட்ட பொருளாளர் சிவராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பை தொகுதி செயலாளர் அழகேசன், நகர துணைச்செயலாளர் பக்கீர் மைதீன், திராவிட கழக ஒன்றிய செயலாளர் சேகர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் மைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சர்க்கரை பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். தொடர்ந்து கிறிஸ்தவ இளைஞர் அணியின் சார்பாக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல் வீரவநல்லூர் தூயகம் முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதியவர்களுக்கான பாட்டு போட்டி, விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை தூய முதியோர் இல்ல நிர்வாகி டயானா மார்டின் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com