குதிரையேற்றம்: வெற்றி பெற்ற வீரர்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி வாழ்த்து

பெங்களூருவில் நடைபெற்ற உலக குதிரையேற்ற போட்டியில் வென்றோரை சந்தித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.
குதிரையேற்றம்: வெற்றி பெற்ற வீரர்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி வாழ்த்து
Published on

சென்னை,

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பெங்களுருவில் நடைபெற்ற உலக குதிரையேற்றக் கூட்டமைப்பின் Federation Equestre Internationale's World Dressage Challenge-2024, தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்று பதக்கங்களை குவித்த வீரர் - வீராங்கனையரை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.

குறிப்பாக, தங்கை மிராயா தாதாபோய் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்ததோடு ஆசியாவின் Best Youth Rider பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், உலக குதிரையேற்ற தரவரிசையில் ஐந்தாம் இடத்தையும் பிடித்து தமிழ்நாட்டுக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்.

அவர் உட்பட குதிரையேற்றத்திலும் வெற்றிக்கொடி நாட்டிய தமிழ்நாட்டு வீரர் - வீராங்கனையரின் சாதனைகள் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com