தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்

கடையநல்லூரில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள்
Published on

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடு வீடாக குப்பைகளைச் சேரிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு காலணி, மழைக்கோட்டு, கையுறை, தலைக்கவசம், முககவசம், ஒளி பிரதிபலிக்கும் சட்டை ஆகிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணமாக காலணிகளை நகராட்சி தலைவர் ஹபீபுர் ரஹ்மான் வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com