வாரம் இருமுறை இயக்கப்படும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயிலை சிவகங்கையில் நிறுத்த வேண்டும்-பயணிகள் கோரிக்கை

வாரம் இரு முறை இயக்கப்படும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயிலை சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாரம் இருமுறை இயக்கப்படும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயிலை சிவகங்கையில் நிறுத்த வேண்டும்-பயணிகள் கோரிக்கை
Published on

மானாமதுரை

வாரம் இரு முறை இயக்கப்படும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரெயிலை சிவகங்கை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவு ரெயில்

சிவகங்கை, மானாமதுரை ரெயில் நிலையம் முக்கியமான ஜங்ஷன் நிலையமாக உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு விரைவு ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்கள் சென்று வருகிறது. இதுதவிர பல்வேறு மாநிலங்களுக்கும் விரைவு ரெயில்கள் சென்று வருகிறது. இந்நிலையில் தென் மாநிலமாக உள்ள கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான மக்கள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணமாக ஆண்டுதோறும் சென்று வருகின்றனர்.

அவர்களின் வசதிக்காக கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரந்தோறும் 2 நாட்கள் விரைவு ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து அதன்படி வாரந்தோறும் திங்கள் மற்றும் சனி ஆகிய 2 நாட்கள் இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

அறிவிப்பு

வாரந்தோறும் திங்கள் மற்றும் சனிக்கிழமை அன்று பிற்பகல் 12.35 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரெயில் மறுநாள் அதிகாலை 5.50 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். மறுமார்க்கத்தில் ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் ரெயில் புதன்கிழமை பகல் 12 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகை ஆகிய வழித்தடங்களில் செல்கிறது.

ரெயிலை விரைவில் தினசரி ரெயிலாக மாற்றவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து விரைவில் அதற்கான அறிவிப்பும் வர உள்ளதாக கூறப்படுகிறது.

சிவகங்கையில் நிற்க கோரிக்கை

தற்போது இந்த ரெயிலானது அருப்புக்கோட்டையில் இருந்து மானாமதுரைக்கு வந்து மானாமதுரை ரெயில் நிலையத்தில் பாயிண்ட் பகுதியாக 2 நிமிடம் மட்டும் நின்று செல்கிறது. இதனால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் ரெயிலில் ஏற முடியாத நிலை உள்ளது. இதேபோல் மாவட்டதலைநகராக உள்ள சிவகங்கை ரெயில் நிலையத்திலும் ரெயில் நின்று செல்லாமல் காரைக்குடி ரெயில் நிலையத்தில் மட்டும் நின்று செல்கிறது. இதன் காரணமாக சிவகங்கையில் இருந்து செல்லும் பயணிகள் இந்த ரெயிலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இதுகுறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி இந்த ரெயில் சிவகங்கை மற்றும் மானாமதுரை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com