ஈரோடு: மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 2 வாலிபர்கள் கைது

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வாலிபர்களை போலீசார் கைதுசெய்தனர்.
ஈரோடு: மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 2 வாலிபர்கள் கைது
Published on

ஈரோடு,

ஈரோடு: மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 2 வாலிபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மூதாட்டி

ஈரோடு மாவட்டம் பவானி மேற்கு தெரு பகுதியில் 74 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். மூதாட்டி நேற்று முன்தினம் இரவில் மூதாட்டி தூங்கிக்கொண்டு இருந்தபோது, நள்ளிரவில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அப்போது 2 வாலிபர்கள் வீட்டில் இருந்த பித்தளை பாத்திரங்களை திருடி சாக்குப்பையில் போட்டு கட்டிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே, 'திருடன், திருடன்' என்று அபயக்குரல் எழுப்பினார். இதனால் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த வாலிபர்கள் மூதாட்டியின் வாயை பொத்தி கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். அதன்பின்னர் மூதாட்டி என்றும் பார்க்காமல் இருவரும் அவரை பாலியல் பலாத்காரம் செய் ததாக தெரிகிறது. பிறகு பித்தளை பாத்திரங்களை எடுத்துக்கொண்டு இருவரும் சென்றுவிட்டனர்.

வாலிபர்கள் கைது

அவர்கள் சென்றபின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை மூதாட்டி உதவிக்கு அழைத்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டியின் நிலையை பார்த்து வேதனை அடைந்தனர். உடனே அவரை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து பவானி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத் துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அதே பகுதியை சேர்ந்த ஹரி (வயது 22) மற்றும் கிரி (24) ஆகிய இருவரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com