

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலிசாருக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் குந்துபாயூர், தவிட்டுப்பாளையம், மற்றும் புதுப்பாளையம் போன்ற இடங்களில் நேற்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
அப்போது குந்துபாயூரை சேர்ந்த ஜாபர் அலி (வயது 21), தவிட்டுப்பாளையம் வேங்கையன் வீதி விக்னேஷ்(வயது 26), மற்றும் புதுப்பாளையம் வ.உ.சி. நகர் ஞானராஜ் (வயது31), ஆகியோர் வீட்டில் சோதனையிட்டபோது, போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது.
எனவே மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.