ஈரோடு இடைத்தேர்தல்: சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஈரோடு இடைத்தேர்தல்: சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு
Published on

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 2-ம் நாளான நேற்று முன்தினம் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பிரசாரத்தை தொடங்கி மரப்பாலம், கச்சேரி ரோடு, மண்டபம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை கூட்டங்களில் பேசினார்.

இந்த நிலையில் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி காளைமாட்டு சிலை அருகே பிரசாரம் செய்ததற்காக சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 35 பேர் மீது தேர்தல் விதிமீறல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் மரப்பாலம் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வீடு அருகே மண்டபம் வீதி ஆகிய இடங்களில் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்தல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஈரோடு பெரியார் நகரில் அனுமதி இன்றி பிரசாரம் செய்ததற்காக சீமான் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com