ஈரோடு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார்..!

வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார்.
ஈரோடு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறினார்..!
Published on

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.

4-வது சுற்று முடிவிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 21 ஆயிரம் வாக்குகள் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திலும் தேமுதிக 4-வது இடத்திலும் உள்ளது. நாம் தமிழர் கவனம் பெறும் வகையில் வாக்குகள் பெற்றுள்ள நிலையில், தேமுதிக கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளதையடுத்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையமான அரசு பொறியியல் கல்லூரிஇருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு வெளியேறி காரில் புறப்பட்டு சென்றார். செல்லும் போது செய்தியாளர்கள் சந்திப்பில், "ஜனநாயகத்திற்கு மதிப்பில்லை, பணநாயகம் வென்று விட்டது" என்று தென்னரசு கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com