ஈரோடு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது -டி.டி.வி.தினகரன் பேட்டி

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது டி.டி.வி.தினகரன் பேட்டி.
ஈரோடு இடைத்தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது -டி.டி.வி.தினகரன் பேட்டி
Published on

மதுரை,

மதுரையில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தல் முடிவு அனைவருக்கும் தெரிந்ததுதான். மருங்காபுரி மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மட்டுமே எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. மற்றபடி அனைத்து சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெற்றுள்ளன.

ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால் தொகுதிக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எண்ணத்தில் மக்கள் வாக்களிப்பது இயற்கையாக நடக்கக்கூடியது. ஆனால் தி.மு.க. மீது 21 மாதங்களில் கடுமையான அதிருப்தி மக்கள் மத்தியில் உள்ளது. இடைத்தேர்தலின்போது இதுவரை கேள்விப்படாத அளவிற்கு மக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவு நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது என்பது கடந்த காலத்தை பார்த்தாலே தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும். துரோகம் இழைக்கப்பட்டதுக்காக தொடங்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஆனால், துரோகம் செய்தவர் தலைமையில் தற்போது அக்கட்சி உள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் பிடியில் இயக்கம் இருப்பதால் இரட்டை இலை சின்னமும், அ.தி.மு.க.வும் இன்னும் பலவீனப்பட்டு மோசமான நிலையை அடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com