ஈரோடு இடைத்தேர்தல்: என் வாக்கை வேறொருவர் செலுத்திவிட்டார் - பெண் பரபரப்பு புகார்


ஈரோடு இடைத்தேர்தல்: என் வாக்கை வேறொருவர் செலுத்திவிட்டார் - பெண் பரபரப்பு புகார்
x

ஈரோடு கிழக்கில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 46 பேர் களத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து செல்கின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தன் வாக்கை வேறொருவர் செலுத்தியதாக பரிதா பேகம் என்ற பெண் ஒருவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்களிடம் தான் முறையிட்டபோது, அதிகாரிகள் சரிவர பதிலளிக்கவில்லை என அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு வாக்குரிமையை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பெண் ஒருவர் இவ்வாறு புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story