ஈரோடு: கட்டிட தொழிலாளர்கள் சென்ற சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பலி

சத்தியமங்கலம் அருகே கட்டிட தொழிலாளர்கள் சென்ற சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
ஈரோடு: கட்டிட தொழிலாளர்கள் சென்ற சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - 2 பெண்கள் பலி
Published on

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள புது கொத்துக்காடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் சரக்கு வேனில் தாண்டாம்பாளையம் கிராமத்திற்கு கறி விருந்துக்கு சென்றுள்ளனர். விருந்தை முடித்துக்கொண்டு மீண்டும் சரக்கு வேனில் சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

வேனை டிரைவர் சல்மான் என்பவர் ஓட்டிவந்துள்ளார். இந்த வேனில் 28 பேர் பயணம் செய்துள்ளனர். சரக்கு வேன் தாண்டாம்பாளையம் டி.என்.ஆர். நகர் வளைவில் திரும்பும் பொழுது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி கட்டிட பெண் தொழிலாளர்கள் கவிதா(30), ஜோதி(50) ஆகிய இரண்டு பேர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் வேனில் இருந்த 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com