டிக்கெட் எடுப்பதில் தகராறு - சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

டிக்கெட் எடுப்பதில் தகராறு ஏற்பட்டதில் சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
டிக்கெட் எடுப்பதில் தகராறு - சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
Published on

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது.

இந்த சுங்கச்சாவடியில் இன்று காலை டிக்கெட் எடுப்பது சம்பந்தமாக சுங்கச்சாவடி ஊழியர் கணேசனுக்கும் மனித உரிமைகள் கழகம் அரசியல் கட்சி பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் சுங்கச்சாவடி ஊழியர் கணேசன் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர் கணேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேஷ் கண்ணன், அவரது டிரைவர் சுடலைமுத்து, காரில் பயணம் செய்த ரவிக்குமார், சந்திர செல்வம், ஆனந்தி ஆகியோரை பெருந்துறை போலீசார் கைது செய்ததாக கூறப்படுகிறது.

கோவையில் இருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்த போது சுங்கச்சாவடியில் இலவசமாக அனுமதிக்க வேண்டும் என அங்கிருந்த ஊழியரிடம் கேட்டதாகவும், அதற்கு ஊழியர் மறுத்ததால் அவரை சுரேஷ் கண்ணன் மற்றும் அவரது டிரைவர் சுடலை முத்து ஆகியோர் கடுமையாக தாக்கியதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com