ஈரோடு: ஊஞ்சலூரில் நின்று செல்லும் ரெயில்கள் விவரம்

சத்குரு ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 97-வது ஆராதனை விழாவை முன்னிட்டு, ஊஞ்சலூரில் ரெயில்கள் நின்று செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூரில் உள்ள சத்குரு ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளின் 97-வது ஆராதனை விழாவை முன்னிட்டு, ஊஞ்சலூர் ரெயில் நிலையத்தில் வருகிற டிசம்பர் மாதம்27-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பின்வரும் ரெயில்கள் 1 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூர் மங்களூரு சென்டரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16159) காலை 7.09 மணிக்கு வந்து 7.10-க்கும், மங்களூரு சென்ட்ரல் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16160) இரவு 6.27 மணிக்கு 6.28-க்கும், திருச்சி பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16843) மதியம் 3.04 மணிக்கு வந்து 3.05-க்கும், பாலக்காடு டவுன் - திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16844) காலை 10.59 மணிக்கு வந்து 11 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

X