ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பரப்புரையை தொடங்கிய தி.மு.க.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடு வீடாக சென்று தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: பரப்புரையை தொடங்கிய தி.மு.க.
Published on

ஈரோடு,

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரது மறைவால் வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2021 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் தி.மு.க.வே களம் காண்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. அ.தி.மு.க, பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், தி.மு.க. சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையை தி.மு.க. இன்று தொடங்கி உள்ளது. இதன்படி பெரியார் நகரில் தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com