

பவானி,
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் ராணுவ வீரர் ஒருவர் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டார். பயந்து போன சிறுமி அவரை விட்டு தப்பித்துச்சென்று நடந்த சம்பவத்தை பற்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து பெற்றோர் பவானி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து ராணுவ வீரர் லோகேஷை கைது செய்தனர்.