ஈரோடு: 2 மாதங்களாக அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

சிறுத்தை கூண்டில் சிக்கிய தால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஈரோடு: 2 மாதங்களாக அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
Published on: 

ஈரோடு,

அம்மாபேட்டை அருகே 2 மாதங்களாக அட்டகாசம் செய்த சிறுத்தை கூண்டில் சிக்கியது.

சிறுத்தை அட்டகாசம்

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி மற்றும் பாலமலை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வந்தது. இந்த பகுதி ஈரோடு. சேலம் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கிட்டம்பட்டி, கொமராயனூர், மசக வுண்டனூர், குருவரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளுக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடு பட்டது. அங்குள்ள வீடு, தோட்டத்தில் கட்டப்பட்ட ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அடித் துக்கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை ஏற்று சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் சென்னம் பட்டி வனத்துறையினர் மசகவுண்டனூர், கொமராயனூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தையை பிடிக்க 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டன. இந்த கூண்டுகளில் ஆடு களை கட்டி வைத்திருந்தனர். மேலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

கூண்டுக்குள் சிக்கியது

இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய சிறுத்தை வழக்கம்போல் வேட்டையாட கிட்டம்பட்டி அருகே உள்ள சின்னமலை பகுதிக்கு வந்தது. அங்கு கூண்டுக்குள் இருந்த ஆட்டை சாப்பிட வந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கிக்கொண்டது.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் மேட்டூர் மற்றும் சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தக வல் கொடுத்தனர். அதன்பேரில் மேட்டூர் வனச்சரகர் செங்கோட்டையன், சென்னம்பட்டி வனச் சரகர் ராஜ்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

அடர்ந்த வனப்பகுதிக்குள்...

தகவல் அறிந்ததும் சேலம் மண்டல வன பாதுகாவலர் கலாநிதி, மாவட்ட வன அதிகாரி அம்புல்கர் யஸ்வந்த் ஜெகதீஷ் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கூண்டில் சிக்கியது 5 அல்லது 6 வயதுடைய ஆண் சிறுத்தை ஆகும். நல்ல உடல்நிலையுடன் அந்த சிறுத்தை காணப்படுவதால் அதனை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்ததும் இங்கிருந்து சற்று தூரத்தில் அடர்ந்த காட்டில் சிறுத்தையை கொண்டு சென்று விட்டுவிடுவோம் என்றனர். அம்மாபேட்டை அருகே 2 மாதங்களாக அட்டகாசத்தில் ஈடுபட்ட சிறுத்தை கூண்டில் சிக்கிய தால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com