ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

ஈரோடு: மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடகனள்ளி வன கிராமத்தில் ஒரு தனியார் விளைநிலத்தில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஒரு ஆண் யானை உயிரிழந்துள்ளதாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, புட்டுசாமி என்பவர் தனது நிலத்தில் சோளம் பயிரிட்டிருந்தார். இதன் காரணாமாக, விலங்குகள் நிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க, கம்பி வேலி அமைத்து சட்டவிரோதமாக மின் இணைப்பை வழங்கியிருந்தார். இந்த நிலையில் ,நேற்று அந்த வழியாக வந்த காட்டு யானை ஒன்று அவரது நிலத்தில் நுழைய முயன்ற போது மின் கம்பி வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்தனர். பின்னர் வன கால்நடை மருத்துவக் குழு, யானை மின்சாரம் தாக்கி இறந்ததாக அறிவித்தது. இதனையடுத்து, நிலத்தின் உரிமையாளர் புட்டுசாமி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com