ஈரோடு: முதியவரின் கழுத்தை அறுத்த முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு

ஈரோடு மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையன் ஒருவன் கத்தியைக் காட்டி நகைகளையும், பணத்தையும் கேட்டு மிரட்டியுள்ளான்.
ஈரோடு: முதியவரின் கழுத்தை அறுத்த முகமூடி கொள்ளையனுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் ஒட்டபாளையத்தைச் சேர்ந்த விவசாயி இருசாக்கவுண்டர் (வயது 80). நேற்று அதிகாலை இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையன் ஒருவன் கத்தியைக் காட்டி நகைகளையும், பணத்தையும் கேட்டு மிரட்டியுள்ளான்.

முதியவர் திருடன் என சத்தம் போடவே, ஆத்திரமடைந்த கொள்ளையன் கத்தியால் அவரது கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினான். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி, ரத்த வெள்ளத்தில் இருந்த இருசாக்கவுண்டரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதியவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய முகமூடி கொள்ளையனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com