ஈரோடு - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு

ஈரோடு - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் 4 வாரங்களுக்கு நீட்டிப்பு
Published on

ஈரோடு,

ஈரோட்டில் இருந்து ஒடிசா மாநிலம் சாம்பல்பூர்க்கும், சாம்பல்பூரில் இருந்து ஈரோட்டுக்கும் வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சாம்பல்பூரில் இருந்து ஈரோடு செல்லும் ரெயில் (வண்டி எண்- 08311) நாளை (புதன்கிழமை), 11, 18, 25-ந்தேதிகளில் காலை 11.35 மணிக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் ஈரோட்டில் இருந்து சாம்பல்பூர் செல்லும் 3 ரெயில் (வண்டி எண்- 08312) 6, 13, 21, 27-ந்தேதிகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்படுகிறது.

இந்த ரெயில்கள் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா. கைகளூரு, பீமாவரம் டவுன், நிட்டவோலு, சமல்கோட், அனகாப்பள்ளி, துவ்வாடா, கொத்தவலச சந்திப்பு, விஜயநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனிகுடா, கேசிங்கா, திட்லகர், பலங்கிர், பர்கர் சாலை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com