தவெக பிரசார பொதுக்கூட்டம்: பெண்களுக்கு தனி இடம்

ஈரோட்டில் வரும் 18ம் தேதி தவெக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துதல், கூட்டணி, வேட்பாளர் தேர்வு, தொகுதி பங்கீடு என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனிடையே, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் வரும் 18ம் தேதி தவெக பிரசார பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு தவெக பொதுக்கூட்டத்திற்கு வரும் பெண்கள் தனியாக நின்று கூட்டத்தில் பங்கேற்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் மேடைக்கு அருகே முன்பகுதியில் 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.






