ஈரோடு மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி பக்கம்: செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் பல்டி

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனின் ஆதரவாளர் என கூறப்படும் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரியும் நேற்று ஏ.கே.செல்வராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஈரோடு மேற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் எடப்பாடி பழனிசாமி பக்கம்: செங்கோட்டையன் ஆதரவு எம்.எல்.ஏ. திடீர் பல்டி
Published on

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான செங்கோட்டையனின் ஆதரவாளர் என கூறப்படும் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரியும் நேற்று ஏ.கே.செல்வராஜை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரமணிதரன், சரஸ்வதி, முன்னாள் எம்.பி. காளியப்பன் உள்ளிட்ட ஈரோட்டின் முக்கிய நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.

பின்னர் பண்ணாரி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், நாங்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் துணை நிற்போம். அதனால்தான் இன்று ஈரோடு மேற்கு மாவட்ட நிர்வாகிகள் திரண்டு வந்துள்ளனர் என்றார்.

ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ. கூறுகையில், அ.தி.மு.க. என்னும் மாபெரும் கட்சி தனி நபரை சார்ந்து இல்லை. இயக்கம்தான் பெரிது. தனி நபர் அல்ல என இங்கு வந்துள்ள இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமியின் உத்தரவுக்கு இணங்க வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற ஒருங்கிணைந்து இயங்குவோம் என்றார்.

செங்கோட்டையன் பதவி பறிக்கப்பட்டதால் அ.தி.மு.க.வினர் பலர் கட்சி பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் மேட்டுப்பாளையத்தில் குவிந்த ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரால் பரபரப்பு ஏற்பட்டது. பண்ணாரி எம்.எல்.ஏ. செங்கோட்டையனின் ஆதரவாளராக அறியப்பட்டவர். செங்கோட்டையன் கூட்டங்களில் அவரும் பங்கேற்று வந்தார். இந்த நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி பக்கம் திரும்பியது ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வினரையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com