ஈரோடு: பள்ளி வளாகத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்

கிராம மக்கள் ஒன்று திரண்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
ஈரோடு: பள்ளி வளாகத்துக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, ஜீர்கள்ளி வனச் சரகங்களுக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவ தால் உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் காட்டு யானை கள் புகுந்துவிடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட சிக்கள்ளி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறி அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கூடம் அருகே வந்தது. பின்னர் அந்த யானை பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு வளாகத்துக்குள் புகுந்தது. பள்ளி வளாகத்தில் மாணவிகள் விடுதி உள்ளதால், யானையை கண்டதும் மாணவிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்த தக வல் கிடைத்ததும் தாளவாடி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி காட்டு யானையை வனப்பகு திக்குள் விரட்டினர்.

இதேபோல் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட சிங்கன்புரம் கிராமத்தில் நேற்று காலை காட்டு யானை கிராமத்துக்குள் புகுந்தது. இதைக்கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com