ஈரோடு: காட்டு யானை மிதித்து தொழிலாளி பலி

காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஈரோடு: காட்டு யானை மிதித்து தொழிலாளி பலி
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே உள்ள குத்தியாலத்தூர் பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்றுவிட்டு கடம்பூரில் இருந்து இருட்டிபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

கடம்பூர் 12-வது மைல் அருகே சென்றபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பசுவராஜை வழிமறித்து அவரை துதிக்கையால் தூக்கி வீசியது. தொடர்ந்து பசுவராஜை யானை காலால் மிதித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com