முருகன் கோவிலில் சிறப்பு யாகம்

முருகன் கோவிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
முருகன் கோவிலில் சிறப்பு யாகம்
Published on

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சந்தனம், திருநீறு, திரவியப்பொடி, பால், பன்னீர், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. குழந்தை வரம் வேண்டியும், கடன் பிரச்சினை தீரவும், சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதேபோல விஜயகரிசல்குளம் வழி விடு பாலமுருகன் கோவிலிலும் மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com