அத்தியாவசிய பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

சென்னை கோயம்பேடு மார்க்கெட் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய பணிகள் நடைபெற உள்ளது.
அத்தியாவசிய பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை
Published on

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை மறுநாள் (6.2.2026, வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 33 கி.வோ. கோயம்பேடு மார்க்கெட் துணைமின் நிலையத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள 33 கி.வோ. 7 பிரேக்கர்களை அகற்றி புதிய பிரேக்கர்களை நிறுவி, தொழில்நுட்ப சோதனைகள் முடித்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் அவசர பணி காரணமாக, பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோயம்பேடு மார்க்கெட்: சீனிவாசநகர், பக்தவச்சலம்தெரு, சேமத்தமன்நகர், இடர்ரோடு, மேட்டுகுளம், நியூகாலனி, திருவீதி அம்மன்கோயில் தெரு, சின்மயாநகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகைநகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணாநகர், புவனேஷ்வரிநகர், விஜிபி அமுதாநகர், சி.டி.என்.நகர், சாந்தா அவென்யூ, சிவந்தி அவென்யூ, ரெட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு மற்றும் கருணேகர் தெரு ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com