

தூத்துக்குடி,
கொரோனா பரவல் காரணமாக தூத்துக்குடி எட்டயபுரத்தில் ஆட்டுச்சந்தை நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சந்தை செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. முக கவாசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி 2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட வியாபாரிகள், ஆடுகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஊர் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டனர். கொரோனா நெறிமுறைகளுடன் சந்தை நடைபெற்றதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.