கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட ‘கிருஷ்ண ஜெயந்தி’ வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
Published on

சென்னை,

மனிதகுல வாழ்க்கை நெறிமுறைகளை மேம்படுத்திட பகவத்கீதை என்ற ஒப்பற்ற ஞானநூலினை உலகிற்கு அருளிய பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களை அழகிய வண்ணக் கோலங்களாலும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரித்து, கிருஷ்ணரே குழந்தையாக தங்கள் இல்லத்திற்கு வருவதாக எண்ணி, இல்லங்களின் வழிநெடுக குழந்தைகளின் பிஞ்சு பாத சுவடுகளை மாவினால் பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பால், பழங்கள், இனிப்பு பலகாரங்களை படைத்து, இறைவனை வழிபட்டு, உற்சாகமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

எங்கெல்லாம் அதர்மம் நிலவுகிறதோ அங்கெல்லாம் தோன்றி தர்மத்தை நிலை நாட்டுவேன் என்று அருளிய கிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், உலகெங்கும் அறம் தழைத்து, அன்பும், அமைதியும், இனிமையும் பெருக வேண்டுமென்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன். இவ்வாறு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com