75வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடினாலும் இதுதான் சட்டம், நீதியின் நிலை..?! - ப.சிதம்பரம்

75வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடினாலும் இதுதான் சட்டம், நீதியின் நிலை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

75வது சுதந்திர தினத்தை தற்போது கொண்டாடும் போதும் இந்தியாவில் சட்டம், நீதியின் நிலை இதுதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "நான் பொது வெளியில் நின்று பிரதமரை பிடிக்கவில்லை என்று கூறினால், யாரேனும் என்னை தாக்கி, கைது செய்து, காரணம் கூறாமல் சிறையில் அடைப்பார்கள் என்று புகழ்பெற்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா நேற்று கூறி இருந்தார். 75வது சுதந்திர தினத்தை தற்போது நாடு கொண்டாடும் போதும், இந்தியாவில் சட்டத்தின் நிலையும் நீதியின் நிலையும் இதுதான்" என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com