"சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், பஸ் கட்டணம் உயராது" - ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம்

ஆம்னி பஸ்கள் கட்டணம் உயர்த்தப்படாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
"சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், பஸ் கட்டணம் உயராது" - ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நேற்று 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 5 முதல் 7 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு, முன் இருந்த கட்டணத்தை விட கூடுதலாக ரூ.5 முதல் ரூ.150 வரை அதிகம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், பஸ் கட்டணம் உயராது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறுகையில், "இந்த பொருளாதார நெருக்கடியை ஆம்னி பஸ் உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில், ஆம்னி பஸ் கட்டணம் வழக்கத்தைவிட உயராது என தெரிவித்துக் கொள்கிறோம். ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணமே தொடரும். மத்திய அரசு உடனடியாக தற்பொழுது உயர்த்தப்பட்டுள்ள டோல்கேட் கட்டணத்தை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com