முதல்-அமைச்சர் கோட் போட்டார், செஸ் விளையாடினார் என்பதெல்லாம் செய்திகளாக வருகின்றன; திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கலாநிதி வீராசாமியின் மகன் திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
முதல்-அமைச்சர் கோட் போட்டார், செஸ் விளையாடினார் என்பதெல்லாம் செய்திகளாக வருகின்றன; திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

சென்னை,

திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி. இவரின் மகன் கலாநிதி வீராசாமி. இவர் எம்.பி.யாக உள்ளார். கலாநிதி வீராசாமியின் மகன் திருமணம் இன்று நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-

ஒரு மாநில கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திமுக உள்ளது. ஒரு தேர்தல் தோல்விக்கே இன்றைக்கு பல கட்சிகள் காணாமல் சென்றிருக்கிறது. கொள்ளை, லட்சியத்திற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கும் கட்சி திமுக. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காகப் பாடுபடும் கட்சி திமுக.

சமூகவலைதளம் நாளடைவில் மறைந்து போகும்

இன்றைக்கு இருக்கும் (தவெக) ஆட்சியை பற்றி சொல்ல வேண்டும் என்று சொன்னால், ஒன்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். சமூகவலைதளம் இன்றைக்கு எந்த அளவுக்கு பரவிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். அந்த சமூகவலைதளம் ஒரு அளவுதான்; நாளடைவில் அதெல்லாம் மறைந்து போகத்தான் போகிறது. இன்றைக்கு சமூகவலைதளத்தை பார்க்கிறபோது, (முதல்-அமைச்சர் விஜய்) ‘கோட்’ போட்டு வந்தார்... கையில் டிபன் கேரியர் எடுத்து வந்தார்... வாட்ச் கட்டி வந்தார்... செஸ் விளையாடினார்.. இன்றைக்கு கோட் போடவில்லை... பட்டு சட்டை, வேஷ்டி-யில் வந்தார் என்பதெல்லாம் செய்திகளாக வருகின்றன.

இவையெல்லாம் எல்லாம் மறைந்து, நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கு முதல்-அமைச்சராக இருப்பவரை (விஜய்) பார்த்து நான் கேட்பதெல்லாம், தயவுசெய்து இன்றைக்கு உங்களைப் பற்றி, உங்கள் ஆட்சியை பற்றி வரும் செய்திகளைப் படியுங்கள். படித்து, அதில் இருக்கும் உண்மையைக் கண்டுபிடிங்கள். அதற்குரிய நடவடிக்கை எடுங்கள் என்பதுதான் என்னுடைய அன்பான வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com