இந்து முன்னணியை கண்டு காவல்துறையே அஞ்சும் நிலை உள்ளது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை வேதனை

மகளிர் காவலரிடம் தகராறு செய்ததாக தஞ்சை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் கைது செய்யப்பட்டார்.
இந்து முன்னணியை கண்டு காவல்துறையே அஞ்சும் நிலை உள்ளது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை வேதனை
Published on

மதுரை,

காவல்துறையே பார்த்து பயப்படும் அளவிற்கு இந்து முன்னணி மோசமாகி விட்டதாக, ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். உள்ளாடைகளை கழட்டிக் காட்டி, மகளிர் காவலரிடம் தகராறு செய்ததாக தஞ்சை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரன் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை மீண்டும் ரத்து செய்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி, சமூகத்தில் இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்ததாகவும், தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவிற்கு மோசமாகி விட்டதாகவும் கருத்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com