“2014-ல் சுதந்திரம் கிடைத்ததாக வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள்” - ப.சிதம்பரம்

இந்தியாவிற்கு 2014-ல் சுதந்திரம் கிடைத்ததாக வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
“2014-ல் சுதந்திரம் கிடைத்ததாக வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள்” - ப.சிதம்பரம்
Published on

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி ஆனந்தனின் 90-வது பிறந்தநாள் விழா, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. அப்போது குமரி ஆனந்தனுக்கு ஆளுயர மாலை அணிவித்து காங்கிரசார் கவுரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் மத்திய நிதி-மந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு குமரி ஆனந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து ப.சிதம்பரம் பேசுகையில், 1930 ஆம் ஆண்டு என்ன நடந்தது? என்றால் பலருக்கு தெரியாது. 1929-ல் என்ன நடந்து என்றால் அதுவும் பலருக்கு தெரியாது. நல்ல வேளையாக 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது என்பதாவது பல பேருக்கு தெரியும் என நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச காலத்திற்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்று வரலாற்றை மாற்றி எழுதினாலும் எழுதுவார்கள் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com