சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'- மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை மாநகராட்சி பள்ளியிலும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் 'ஸ்நாக்ஸ்'- மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் கடைசியாக 2016-ம் ஆண்டு தாக்கலானது. அதன் பிறகு உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் நேரடி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இந்த நிலையில், மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டு, சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார்.

மேயராக பதவியேற்ற குறுகிய காலகட்டத்திலேயே 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேயர் பிரியா தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இவற்றில் பெரும்பாலான பணிகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. ஒரு சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யபட்டது. சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறு தீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

*பரமாரிப்பு பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு

*சென்னையில் 10 மேல்நிலைப்பள்ளிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்படும்

*சென்னை மாநகராட்சியில் தினமும் 10 நிமிடங்கள் மகிழ்ச்சியான வகுப்பு நடத்தப்படும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com