சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு - மு. வீரபாண்டியன்

சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மு. வீரபாண்டியன்
Published on

சென்னை,

சட்டமன்ற ஜனநாயக மாண்புகளை காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்று மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சட்டமன்ற பதிலுரையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெண்களை இழிவுப்படுத்தும் விதத்தில் யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார். இது வரவேற்கத்தக்கது. அத்துடன் சமூகவலை தளங்களில் பெண்கள் இழிவுப்படுத்தப்படுவதையும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

சட்டமன்றத்தின் நேரம்

உயிர்புள்ள ஜனநாயகத்திற்கு சட்டமன்ற நடவடிக்கைகள் மக்களின் கோரிக்கைகளுக்கான பிரச்சனைகளை பேசவும், தீர்வு காணவும் கவனம் செலுத்திட வேண்டும். எதிர்கட்சிகளின் குரலுக்கு செவி சாய்க்கவும், அதற்கு உரிய முறையில் பதிலளிப்பதற்கும் மாறாக சட்டமன்ற நடவடிக்கைகளில் வெறும் கூச்சல் மிகும் வாதமுறையால் சட்டமன்றத்தின் நேரம் வீணடிக்கப்படுகிறது. சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதில் ஆளுங்கட்சிக்கு அதிக பொறுப்பு உள்ளது. அத்துடன் சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com