"ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு" - இளையராஜா கருத்திற்கு கவர்னர் தமிழிசை ஆதரவு

ஒருவர் ஒரு கருத்தை கூறினால் அதை கருத்து சுதந்திரமாக கருதி ஏற்க வேண்டுமே தவிர விமர்சிக்க கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
"ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு" - இளையராஜா கருத்திற்கு கவர்னர் தமிழிசை ஆதரவு
Published on

சென்னை,

பிரதமர் மோடி, அம்பேத்கர் குறித்த இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

சென்னை தரமணியில் சிஎஸ்ஐஆர் வளாகத்தில் நடைபெற்ற அம்பேத்கரின் 131வது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழிசை, அம்பேத்கரின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார்.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்பேத்கர் அனைவரின் கருத்தும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறியவர். அப்படியிருக்கும் போது அம்பேத்கர் குறித்து கருத்து தெரிவித்தால் விமர்சிப்பது அம்பேத்கர் வலியுறுத்திய கருத்து சுதந்திரத்திற்கு உகந்தது அல்ல என்று தெரிவித்தார்.

ஒருவர் ஒரு கருத்தை கூறினால் அதை கருத்து சுதந்திரமாக கருதி ஏற்க வேண்டுமே தவிர விமர்சிக்க கூடாது என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com