

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளைய தினம் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நாள் என்பது, நல்லாட்சியை தேர்வு செய்யும் மக்களின் சக்தியை முறையாகப் பயன்படுத்தும் நாள். ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
கடுமையான வெயில் நிலவி வரும் இந்த நாட்களில், பொதுமக்கள் தங்கள் வாக்குகளை காலை அல்லது மாலை நேரங்களில் பதிவு செய்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் மதிய நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியவர்கள், குடை பயன்படுத்துவது அவசியம்.
வாக்களிப்பது, ஒவ்வொரு குடிமகனின் உரிமை மட்டுமல்ல. ஜனநாயகக் கடமையும் கூட. ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்போம். தவறாமல் வாக்களிப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.