ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் - அண்ணாமலை பேட்டி

திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார்.
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் - அண்ணாமலை பேட்டி
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியல்களை வெளியிட்டார். அதில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவதூறு வழக்கு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை (14-ம் தேதி) நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் அண்மையில் சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், நீதிமன்றத்தின் ஆணைப்படி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ஆஜரானார். அப்போது அவருக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையான ஆகஸ்ட் 24-ந்தேதி மீண்டும் ஆஜராகுமாறு அண்ணாமலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது:- "ஊழலுக்கு எதிரான பா.ஜ.க.வின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் 3ம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது. திமுக பைல்ஸ் பாகம் 2-ல் அதிமுகவில் இருந்து திமுக சென்ற அமைச்சர்கள் தான் அதிகம் உள்ளனர்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com