முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் கண்டுபிடிப்பு - லஞ்ச ஒழிப்புத்துறை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.32 லட்சம் கண்டுபிடிப்பு - லஞ்ச ஒழிப்புத்துறை
Published on

சென்னை,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில்அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அது சம்பந்தமான ஆவணங்களை கைப்பற்ற சென்னையில் 10 இடங்களிலும், கோவையில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்ப்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சுமார் 9 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு பெற்றது.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.32.98 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அரசுக்கு ரூ.500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் தொடர்புடைய 316 ஆவணங்கள், 1,228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளிப்பொருட்கள், 10 நான்கு சக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதைபோல முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.18.37 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. 1,872 கிராம் தங்க நகைகள், 8.28 கிராம் வெள்ளிப்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

13 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 120 ஆவணங்கள், 1 வன் தட்டு, 1 பென்டிரைவ், 2 ஐபோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதா கலஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com