முன்னாள் ராணுவ வீரர் பலி

முன்னாள் ராணுவ வீரர் பலி
முன்னாள் ராணுவ வீரர் பலி
Published on

சாய்பாபாகாலனி

கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூரை சேர்ந்தவர் ஜெகநாதராஜன் (வயது 59). முன்னாள் ராணுவ வீரரான இவர் கோவையில் உள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனதுவீட்டின் படிக்கட்டில் ஏறி வீட்டுக்குள் செல்லும்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அந்தப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாய்பாபாகாலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com