சீருடை பணியாளர் தேர்வுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

சீருடை பணியாளர் தேர்வுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
சீருடை பணியாளர் தேர்வுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
Published on

கரூர் சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான மொத்தம் 3552 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் 2180-ம், இரண்டாம் நிலை காவலர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 1091, சிறைத்துறை இரண்டாம் நிலை காவலர் 161-ம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் 120 ஆகும். இவற்றில் 5 சதவீத இடங்கள் முன்னாள் படை வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். இதில் ஜூலை 1-ந்தேதி அன்று 47 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். படை பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகள் நிறைவு செய்யாத முன்னாள் படை வீரர்கள் மேற்காணும் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஆகஸ்டு 15 ஆகும். இணையவழி மூலமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.tnusrb.tn.gov.in. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள தகுதி படைத்த முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு பெருமளவு விண்ணப்பித்து பயனடையலாம். விண்ணப்பித்த முன்னாள் படை வீரர்கள் அதன் விவரத்தினை வரும் ஆகஸ்டு 20-ந்தேதிக்குள் திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குனர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com