முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

தக்கலை, 

தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு குமரி சி.ஆர்.பி.எப். நலச் சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு காவல் சீருடை பணியாளர்கள் தேர்வில் ஓய்வு பெற்ற துணை ராணுவ படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீடு தமிழக அரசு ரத்து செய்ததை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு தலைவர் சேம்ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் டேவிட் பிரேம், பொருளாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் இணைச்செயலாளர் ஜெகநாதன், துணைச்செயலாளர் ராஜகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com