முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வருகிற 19-ந்தேதி நடக்கிறது.
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 19-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களை சேர்ந்த விதவையர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com