இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் தேர்வுத்தாள் கசிவுகள் – மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டுமே 60%-க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன.
மாணிக்கம் தாகூர்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இதில் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவென்றால், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி/மத்திய அரசு தேர்வுகள் உட்பட பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தேர்வுகளில் மட்டுமே 60%-க்கும் அதிகமான முறைகேடுகள் நடந்துள்ளன!

​பா.ஜ.க-வின் "Double Engine" அரசு இப்போது இளைஞர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் "Doubtful Engine" ஆக மாறிவிட்டது!

மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்களே, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மட்டும் ஏன் இவ்வளவு அதிக தேர்வுத்தாள் கசிவுகள்? இதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கிறது?

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com