வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வு

புதுக்கோட்டையில் 4 மையங்களில் நடந்த வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வை 940 பேர் எழுதினர்.
வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வு
Published on

வட்டார கல்வி அதிகாரி

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வி துறையில் வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, ராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வை எழுதுவதற்காக 1,134 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்கள் தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு இன்று காலையிலேயே வந்தனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டிருந்தன. இதனால் தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.

கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டையில் 4 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வை 940 பேர் எழுதினர். 194 பேர் தேர்வு எழுதவரவில்லை. முன்னதாக தேர்வு நடைபெற்றதை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மேலும் இத்தேர்வு நிகழ்வுகளை வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து வீடியோ பதிவு செய்யப்பட்டன. தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. முன்னதாக கலெக்டர் ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com