அகழாய்வு பணிகள் மும்முரம்

சிவகாசி அருகே அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அகழாய்வு பணிகள் மும்முரம்
Published on

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வில் இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. தற்போது 10-வது அகழாய்வு குழி தோண்டப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் சமையல் செய்யும் அறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சமையல் செய்ய பயன்படுத்தப்பட்ட மண் சட்டிகள், மண் குடங்கள், தண்ணீர் குடிக்க பயன்படுத்தப்பட்ட மண்குவலைகள், கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழாய்வு குழியை அகலப்படுத்தும் போது வீட்டின் சுவர் பகுதி கண்டு பிடிக்க வாய்ப்புள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com