

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து, கீழடி அகரம், கொந்தகை அகழாய்வு தளங்களை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அகழாய்வு குழிகளை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை ஐ.ஐ.டி.யிடம் தொழில்நுட்ப உதவி பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 8ம் கட்ட அகழாய்வு நடத்துவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.