டிடிவி தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்

டிடிவி தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறி உள்ளார்.
டிடிவி தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்
Published on

சென்னை

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல் அமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

உட்கட்சி விவகாரம், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் விவகாரம், நாடாளுமன்ற தேர்தல், நிர்வாகிகள் நியமனம், அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடந்ததாக கூறப்பட்டது.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் டிடிவி தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com